Endangered Wildlife And Environmental Trust took part in the Tamil Nadu Forest Department’s Synchronised Terrestrial Bird Census and Wetland Bird Surveys over the last two weekends. Kalla Perambur Lake, Samuthiram Lake, Allur Lake,Chellapanpettai Lake, Grand anicat , ponnan Lake,Acchampatti RF,Cennampatti RF,Tamil University Campus, Periyar maniyamai University campus, Kumbakonam Range& Perambalur Range .were surveyed for Terrestrial Bird survey.
It was a wonderful interaction between our members and the FD representatives. Some pictures from the surveys carried out on 9th March and 15th and 16th March 2025.
தோழமைகளுக்கு வணக்கம்.
உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு நம் EWET கும்பகோணம் பிரிவின் சார்பாக ஐந்து இடங்களில் நிகழ்வுகள் நடந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள், கும்பகோணம் கவின் கலை கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம். பள்ளி மாணவர்கள் இலவச நீர்க்குவளை வழங்குதல் என தொடர் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்த EWET ஒருங்கிணைப்பாளர்கள்
மருத்துவர். திருமதி.பிரீத்தி சந்திரமோகன், திரு.பெஞ்சமின். உறுப்பினர்கள் திருமதி .ராதா, திருமதி.ரமா மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும் மற்றும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Bird watching at the Samuthiram lake
Thanjavur: Bird watching at the Samuthiram lake near Thanjavur marked the World Wetland Day observed on Sunday.
The officials of the Forest Department, the volunteers of Endangered Wildlife and Environmental Trust (EWET) participated in bird watching and special lectures held on the banks of the sprawling lake.
According to officials a total of 418 birds of 48 species were found in the lake. Of these species, Golden Oriole (“Man Kuyil”), Jacobin Cuckoo (Sudalai Kuyil), which used to be seen rarely in the area, were seen in large numbers. The other notable species of birds spotted are Asian Paradise flycatcher, Medium Egret, Common hawk-cuckoo, Purple Heron, Gray Heron, Whiskered Tern, Common Tern and Black Winged Kite.
WORLD WETLAND DAY (02/02/2025)
உலக ஈரநில நாளை முன்னிட்டு தஞ்சாவூர் வனக்கோட்டம் மற்றும் EWET நிறுவனமும் இணைந்து தஞ்சை மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரி கரையில் ஈர நில பற்றிய கருத்துரை நிகழ்வும் பறவை அவதானித்தல் நிகழ்வும் நடைபெற்றது இந்நிகழ்வில் தஞ்சை வனச்சரக அலுவலர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து EWET கொண்டனர்.
87 th Bird Watching & Beginner Training Camp (05/01/2025)
தோழமைகளுக்கு வணக்கம்…
தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளை(EWET) அமைப்பின் மூலமாக நடைபெற்ற 87 வது பறவை அவதானித்தல் நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் ஏரியில் 05/01/2024 காலை 6:00 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது இந்நிகழ்வில் 84 பறவை இனங்கள் (1128 பறவைகள் ) அவதானிக்கப்பட்டன
இந்நிகழ்வில் EWET அமைப்பினர் 21 நபர்கள் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய தன்னார்வலர்களுக்கு 28 நபர்களுக்கு பறவை அவதானித்தல் பற்றிய ஆரம்ப நிலை பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பறவை அவதானித்தலில் வலசை பறவைகளான நத்தை கொத்தி நாரை, ஆற்று ஆலா, மீசை ஆலா, நடுத்தர கொக்கு, அரிவாள் மூக்கன் போன்ற இனங்களும், வாழ்விட பறவைகளான தகைவிலான், பஞ்சுருட்டான், வேதிவால் குருவி, நீலக்கண்குயில், சுடலைக் குயில் போன்ற இனங்களும் காணப்பட்டன.
இந்நிகழ்வினை அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் முனைவர்.சதீஸ்குமார் ராஜேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்கினார், மற்றும் திரு.சரவணன், மருத்துவர் .பிரீத்தி சந்திரமோகன், திருமதி.சத்யா, திரு.குலோத்துங்கன், திரு. வசீகர் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
தஞ்சையில் நடைபெற்ற செல்ல பிராணிகள் தத்தெடுக்கும் முகாமில் ஆதரவற்ற நாய்க்குட்டியை தத்தெடுத்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) சார்பில் நடைபெற்ற செல்லப் பிராணிகள் தத்தெடுக்கும் முகாமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை SPCA வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர், சாலையோரத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஆதரவற்ற நாய்க்குட்டியை தத்தெடுத்து, உறவில்லாத பிராணிகளுக்கு உறவை உருவாக்கும் முயற்சிக்கு முன்னுதாரணமாக அமைந்தார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், “தஞ்சாவூர் SPCA கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஆதரவற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை வழங்கி வருகிறது. நாய்களை அல்லது பிற செல்ல பிராணிகளை துன்புறுத்தாமல், அதனை பாதுகாப்பது நமது கடமை. உயர்தர நாய்களை வளர்ப்பதை விட நாட்டு இன நாய்களை தத்தெடுத்து வளர்ப்பது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் அவை நன்றி மிகுந்தவை, மற்றும் அதன் பராமரிப்பு செலவுகள் குறைவானவை. இந்த முகாம், அந்த விழிப்புணர்வை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். மேலும், SPCA தொடர்ந்து மாதாந்திர முகாம்கள், விரைவில் நாய்கள் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்றார்.
இன்று நடைபெற்ற முகாமில் மொத்தம் 49 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 44 நாய்க்குட்டிகளும் 3 பூனைக்குட்டிகளும் பொதுமக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற இந்த முகாமில், இலவச வெறிநாய் தடுப்பூசி வழங்கப்பட்டதுடன், பலர் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பங்கேற்பாளர்கள்
இந்த முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், SPCA மருத்துவர் டாக்டர் ஜனனி, மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், SPCA உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரஃபி, விஜயலட்சுமி, மற்றும் ரெட்கிராஸ் மாவட்ட துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை EWET சதீஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.
Hello friends.
Dr. Kalaiyarasan, the former director of the Chennai Snake Park, which is one of the two crowns in the field of reptiles in India, and the current director is Dr. Rajaratnam. They too.
Madras Crocodile Bank Trust & Thanjavur Reptile Zoo Mr. Ganesh Muttiah also met us today at our EWET office and had a pleasant discussion.
-EWET-
11/12/2024
© Copyrights EWET Thanjavur. Sponsored By YOGA’S IT Solutions